sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'த்ரெட்ஸ்' டவுன்லோட் செய்வது எப்படி? அதிலுள்ள அம்சங்கள் என்னென்ன?

/

'த்ரெட்ஸ்' டவுன்லோட் செய்வது எப்படி? அதிலுள்ள அம்சங்கள் என்னென்ன?

'த்ரெட்ஸ்' டவுன்லோட் செய்வது எப்படி? அதிலுள்ள அம்சங்கள் என்னென்ன?

'த்ரெட்ஸ்' டவுன்லோட் செய்வது எப்படி? அதிலுள்ள அம்சங்கள் என்னென்ன?


UPDATED : ஜூலை 07, 2023 12:47 PM

ADDED : ஜூலை 07, 2023 12:45 PM

Google News

UPDATED : ஜூலை 07, 2023 12:47 PM ADDED : ஜூலை 07, 2023 12:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'டுவிட்டர்' சமூக வலைதள செயலிக்கு போட்டியாக, 'வாட்ஸாப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களை வைத்துள்ள, 'மெட்டா' நிறுவனம், 'த்ரெட்ஸ்' என்ற சமூக வலைதள செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிகிறது.

டுவிட்டர் நிறுவனர் எலான் மஸ்க், டுவிட்டரில் செய்துள்ள பல அதிரடி மாற்றங்களால் நொந்துப்போன பயனர்கள், இப்போது 'த்ரெட்ஸ்' சமூக வலைதளத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.

எப்படி டவுன்லோட் செய்வது?


ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் பயனர்கள் நேரடியாக பிளே ஸ்டோர் / ஆப் ஸ்டோரில் இருந்து 'த்ரெட்ஸ்' செயலியை நேரடியாக டவுன்லோட் செய்யலாம். அதன் பின்னர் பயனர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கு விவரங்கள் மூலமாக இதில் லாக்-இன் செய்யலாம். அதாவது, இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ளவர்கள், அந்தக் கணக்கை வைத்தே இந்த சமூக வலைதளத்தையும் பயன்படுத்தலாம்.

அதில் இருக்கும் விவரங்களை அப்படியே இதில் சேர்க்கலாம். அதற்கு பயனர்கள் பர்மிஷன் கொடுக்க வேண்டியது அவசியம். புதிதாக சேருவோர், இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய வேண்டும்.

டுவிட்டர் - த்ரேட்ஸ் வித்தியாசம் என்ன?


டுவிட்டர் வலைதளத்தை விட, த்ரெட்ஸ் வலைதளத்தில் கூடுதல் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, டுவிட்டரில் 280 எழுத்துகளுக்கு மேல் ஒரு டுவிட்டில் பதிவிட முடியாது. ஆனால், த்ரெட்சில் 500 எழுத்துகள் வரை பதிவிடலாம். டுவிட்டரில் 2 நிமிடம் 20 நொடிகள் கொண்ட வீடியோவை மட்டுமே பதிவேற்ற முடியும். த்ரெட்சில் 5 நிமிடங்கள் வரையிலான வீடியோவையும் பதிவேற்றலாம். அதேநேரத்தில் டுவிட்டரில் உள்ள ஹேஸ்டேக், டிரெண்டிங் போன்ற அம்சங்கள் த்ரெட்சில் இல்லை.

தனிநபர் பாதுகாப்பு


மேலும், இந்த த்ரெட்ஸ் சமூக வலைதளத்தின் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தனிநபர் தகவல் பாதுகாப்பு சட்டம் கடுமையாக உள்ள, 27 நாடுகள் அடங்கிய, ஐரோப்பிய யூனியனில் மட்டும், இந்த புதிய சமூக வலைதளம் அறிமுகமாகவில்லை.

'த்ரெட்ஸ்'-ல் நமது தினமலர்

Image 1137253நம் நாட்டிலும் இந்த தளத்தில் மத்திய, மாநில அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என, பல பிரபலங்களும் இணைந்துள்ளனர். அதேபோல், த்ரெட்ஸ் சமூக வலைதளம் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அதில் இணைந்த நம் நாளிதழ் 'தினமலர்' அதில் தனி பக்கத்தை துவக்கியது. இதை கவனித்த உலகம் முழுதும் உள்ள தமிழர்கள், தினமலர் த்ரெட்ஸ் பக்கத்திற்கு அமோக ஆதரவு அளித்து பின் தொடர்ந்து வருகின்றனர்.

நீங்களும் 'த்ரெட்ஸ்'-ல் தினமலர் பக்கத்தை 'பாலோ' செய்ய இந்த கிளிக் செய்ய வேண்டிய லிங்க்:

https://www.threads.net/@dinamalardaily

மற்ற சமூக வலைதளப் பக்கங்களையும் 'பாலோ' செய்ய http://dmrnxt.in/follow என்ற லிங்கை கிளிக் செய்யவும்.






      Dinamalar
      Follow us