ADDED : நவ 28, 2025 06:56 AM

புதுக்கோட்டை: காங்கிரசைச் சேர்ந்த புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அளித்த பேட்டி:
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை, அவசரமாக ஏன் மேற்கொள்ள வேண்டும்? பீஹார், மேற்கு வங்கம், ஒடிஷாவில் இருந்து வந்து, தமிழகத்தில் பணிபுரிகின்றனர்.
அவர்கள் பெயர், இங்குள்ள வாக்காளர் பட்டியலில் இருக்கிறது; அவர்களுக்கு அந்த மாநிலத்திலும் ஓட்டு இருக்கிறது. அங்கு ஓட்டளித்துவிட்டு, இங்கும் ஓட்டளிப்பர். இதற்கு தேர்தல் கமிஷன் பதிலளிக்கவில்லை.
பீஹாரில், 7 கோடியே 55 லட்சம் ஓட்டுகள் தான் வாக்காளர் பட்டியலில் இருந்தது. பிறகு, எப்படி ௭ கோடியே 75 லட்சமாக அது உயர்ந்தது? கூடுதலாக 20 லட்சம் ஓட்டுகள் எங்கிருந்து, எப்படி வந்தன? யாருக்கும் தெரியவில்லை.
புதுச்சேரி பா.ஜ., கூட்டணி முதல்வரான ரங்கசாமி, பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டார். அப்படி வெளியேறினால், மறு நிமிடமே சிறையில் இருப்பார். அந்த அளவுக்கு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

