ADDED : அக் 08, 2024 10:56 PM
திருநெல்வேலி மாவட்டம், பாப்பாக்குடி பஞ்சாயத்து யூனியன் தலைவராக, பட்டியலினத்தைச் சேர்ந்த பூங்கோதை சசிகுமார் இருந்தார். தி.மு.க.,வைச் சேர்ந்தவர். தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். யூனியன் துணைத் தலைவராக, தி.மு.க., ஒன்றிய செயலர் மாரிவண்ணமுத்து உள்ளார்.
அவரது ஜாதி ரீதியான அடக்குமுறை மற்றும் அவமதிப்புகளையும் தாங்கிக்கொள்ள முடியாமல், பூங்கோதை பதவி விலகியது அதிர்ச்சி அளிக்கிறது.
யூனியன் சேர்மனாக இருந்தபோதும், அவருக்கு நாற்காலி, மேஜை வழங்கப்படவில்லை. அதனால், ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக, அவர் பதவி விலகியதாக அவரது கணவர் சசிகுமார் கூறியுள்ளார். இதுகுறித்து முதல்வர், துாத்துக்குடி எம்.பி., கனிமொழி ஆகியோரிடம் முறையிட்டும் பலனில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
பட்டியலினத்தைச் சேர்ந்த, தி.மு.க., சேர்மனுக்கு, அதே கட்சியைச் சேர்ந்த ஒன்றிய செயலரால் இழைக்கப்படும் சமூக அநீதியை, தி.மு.க.,வால் சரிசெய்ய முடியவில்லை. அவர்கள் எப்படி ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் சமூக நீதி வழங்குவர்?
- அன்புமணி,
பா.ம.க., தலைவர்

