பல்லடம் பள்ளியில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவம்; தீவிர விசாரணை
பல்லடம் பள்ளியில் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவம்; தீவிர விசாரணை
ADDED : ஜன 29, 2025 02:18 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலை பள்ளி வகுப்பறைக்குள் மனிதக்கழிவு வீசப்பட்ட சம்பவம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த, காமநாயக்கன்பாளையத்தில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 10ஆம் வகுப்பு அறையில் மனித கழிவை மர்ம நபர்கள் வீசி சென்றனர். பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, பல்லடம் டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.