ADDED : மார் 19, 2024 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான நிர்வாகிகள், சென்னை அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தி.மு.க., கூட்டணிக்கு நேற்று ஆதரவு தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி, தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இருக்கிறது. ஆதரவு தெரிவிப்பதற்காக, முதல்வரை சந்தித்தோம். ஒரு தொகுதி எங்களுக்கு ஒதுக்கவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், ஒரு கட்சி நலனை விட நாட்டில் ஜனநாயகம்., மதசார்பின்மை கூட்டாட்சி தத்துவம் நிலைத்து நிற்க வேண்டும் என்பதால், தியாகத்தின் அடிப்படையில், தி.மு.க., தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரசாரம் செய்யவுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

