உள்ளடக்கத்திற்கு செல்ல

'மக்கள் உபயோகிக்க முடியாத கருப்பு அரிசி அதிகம் கிடைக்க ஈரப்பதமான நெல் காரணம்'
'மக்கள் உபயோகிக்க முடியாத கருப்பு அரிசி அதிகம் கிடைக்க ஈரப்பதமான நெல் காரணம்'
ADDED : ஆக 28, 2026 06:28 AM

அ நிறம் | அளவு
சென்னை: சட்டசபையில் நடந்த விவாதம்:
தி.மு.க.,-கோவி செழியன்: தி.மு.க., ஆட்சியில், 21 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசு அனுமதி மறுத்து விட்டது. நடப்பாண்டு அனுமதிக்கப்படுமா?
அமைச்சர் வெங்கட ரமணன்: நெல் கொள்முதல் செய்யப்பட்டு, எட்டு மாதம் கழித்து அரவைக்கு அனுப்பப்படுகின்றன. வழக்கமாக, 100 கிலோ நெல்லை அரவை செய்தால், 68 சதவீத அரிசி கிடைக்கும். ஈரப்பத ம் உள்ள நெல்லாக இருந்தால், 60 முதல் 62 சதவீதம் மட்டும் அரிசி கிடைக்கிறது. மேலும், கருப்பு அரிசியும் அதிகம் இருக்கிறது .
ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லால், எவ்வளவு 'கலர் ஸ்டாப்பர்' போட்டாலும், 50 ஆண்டுகள் ஆனாலும், கருப்பு அரிசி வருவதை கட்டுப்படுத்த முடியாது. மக்கள் உபயோகிக்க முடியாத, கருப்பு அரிசியாகத்தான் கிடைக்கும்.
இவ்வாறு, விவாதம் நடந்தது.
