ADDED : பிப் 18, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த தானகவுண்டன்புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 28; மொபைல்போன் கடை ஊழியர்.
அதே பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசுதா, 25. நான்கு மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
ரஞ்சித் குமாருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது. ஜெயசுதா கண்டிக்கவே, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறால், ஜெயசுதாவை அவரது தாய்வீட்டில் கொண்டு விட, பைக்கில் ரஞ்சித்குமார் அழைத்துச் சென்றார். அப்போது, பைக் நிலை தடுமாறி இருவரும் விழுந்ததில் ஜெயசுதா படுகாயமடைந்தார்.
'பைக்கிலிருந்து தள்ளிவிட்டு, கணவர் கொலை செய்ய முயன்றார்' என, செங்கம் போலீசில், ஜெயசுதா புகார் தரவே, ரஞ்சித்குமாரை போலீசார் நேற்று கைது செய்தனர்.