ADDED : ஜூன் 01, 2025 04:35 AM

வானுார்: கணவரைக் காணவில்லை என மனைவி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர.
ஆரோவில் அடுத்த பட்டானுார் கிரேஸ் நகரைச் சேர்ந்தவர் ரூத் லில்லி, 54; ஜிப்மர் செவிலியர். இவரது கணவர் ஜாபேஸ்ராஜ், 53; இருவரும் கடந்த 26 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னிஷினியாக பணிபுரிந்து வந்த வந்த ஜாபேஸ்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு வேலையை விட்டுள்ளார்
இதனால், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி தாகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜாபேஸ்ராஜ் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ரூத் லில்லி அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.