நீர் மின் உற்பத்தி பாதிப்பு: 73 கோடி யூனிட்டாக சரிவு
நீர் மின் உற்பத்தி பாதிப்பு: 73 கோடி யூனிட்டாக சரிவு
ADDED : ஜூலை 15, 2026 11:06 PM
சென்னை: தமிழக மின் வாரிய அணைகளில் தண்ணீர் இல்லாததால், நீர் மின் நிலையங்களில், இந்தாண்டு, 73 கோடி யூனிட்கள் மட்டுமே மின் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது.
நீலகிரி, கோவை, ஈரோடு, திருநெல்வேலி மாவட்டங்களின் மலை மற்றும் வன பகுதிகளில், மின் வாரிய த்திற்கு, 2,325 மெகா வாட் திறனில், 47 நீர் மின் நிலையங்கள் உள்ளன. அவற்றுக்கு அருகில் உள்ள அணைகளில் மழை காலங்களில் தண்ணீர் தேக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும், சேலம், மேட்டூர் உட்பட பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள அணைகளில் இருந்து, பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்போது, அவற்றின் அருகில் உள்ள நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
அணைகளில் போதிய அளவுக்கு தண்ணீர் இருப்பதில்லை.
இதனால், நீர் மின் நிலையங்களில் தினமும் சராசரியாக, 90 லட்சம் முதல் 1 கோடி யூனிட்கள் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த மாதம், தென் மேற்கு பருவ மழை சீசன் தொடங்கியது. இருப்பினும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மின் வாரிய அணைகளுக்கு போதிய அளவுக்கு தண்ணீர் வரத்து இல்லை.
இதனால், நீர் மின் நிலையங்களில், இந்தாண்டு ஏப்., முதல் நேற்று முன்தினம் வரை, 73 கோடி யூனிட்கள் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டு இதே காலத்தில், 145 கோடி யூனிட்களாக இருந்தது.
