நலமாக உள்ளேன்; கத்தியால் தாக்கப்பட்ட டாக்டர் பாலாஜி வீடியோ வெளியீடு
நலமாக உள்ளேன்; கத்தியால் தாக்கப்பட்ட டாக்டர் பாலாஜி வீடியோ வெளியீடு
ADDED : நவ 14, 2024 10:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் கத்தியால் தாக்கப்பட்ட டாக்டர் பாலாஜி நலமாக உள்ளேன் என வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், புற்றுநோய் துறை டாக்டர் பாலாஜியை, ஒரு நோயாளியின் மகன் கத்தியால் சரமாரியாக குத்தினார். காயமடைந்த டாக்டர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், இன்று (நவ.,14) டாக்டர் பாலாஜி காலை உணவு உட்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
வீடியோவில் அவர், 'நல்லா ஸ்டேபிள்ளாக இருக்கேன். மருத்துவ சோதனை செய்தார்கள். பேஸ் மேக்கர் பொருத்தப்பட்டு உள்ளதால், இதய பரிசோதனை நடத்தப்பட உள்ளது' என தெரிவித்தார். பின்னர் நலமாக இருக்கிறேன் எனக் கூறிய டாக்டர் பாலாஜி காலை உணவு சாப்பிட்டார்.

