sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நான் ஓய்வு எடுக்கப்போவதில்லை; 2026ல் ஆட்சி அமைக்க களம் தயார் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

/

நான் ஓய்வு எடுக்கப்போவதில்லை; 2026ல் ஆட்சி அமைக்க களம் தயார் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

நான் ஓய்வு எடுக்கப்போவதில்லை; 2026ல் ஆட்சி அமைக்க களம் தயார் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

நான் ஓய்வு எடுக்கப்போவதில்லை; 2026ல் ஆட்சி அமைக்க களம் தயார் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்

3


ADDED : ஆக 13, 2025 02:55 PM

Google News

3

ADDED : ஆக 13, 2025 02:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''நான் ஓய்வு எடுக்கப்போவதில்லை. 2026ல் ஆட்சி அமைக்க களம் தயார் ஆகிவிட்டது'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கட்சி நிர்வாகிகளை சந்தித்து நேரடியாய் பேசிட ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. ஆனாலும் எனக்கு சலிப்பே ஏற்படுவதில்லை. நாள்தோறும் திட்டங்களின் செயல்பாடுகளை நானே முன் நின்று கண்காணித்து வருகிறேன். பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்கள் மத்தியில் நமது செல்வாக்கு அதிகரித்துள்ளது.

கண்கூடாக...

நமக்கான ஆதரவு மனநிலை தான் மக்களிடம் பொதுவாக இருந்து வருகிறது.தற்போது பாஜ அரசு தேர்தல் கமிஷன் மூலம் என்னென்ன அடடூழியங்களை பீஹாரில் மேற்கொண்டு வருகிறது என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.

எப்படி இதற்கு முன்பு முதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டேனோ அதே போல வரும் செப்டம்பர் மாதமும் வெளிநாடு செல்ல உள்ளேன் என்ற செய்தியையும் இந்த நேரத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

@subtitle@முதலீடுகளை ஈர்த்து வர...!

வரும் செப்படம்பர் மாதத்தில் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலீடுகளை ஈர்த்து வர உள்ளேன். வரும் நாட்களில் நமது அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் தமிழகத்தின் வளர்ச்சி பிற வளர்ந்த நாடுகளுக்கு இணையாக உயரும் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

அதற்கு உங்களது ஆதரவும், ஒத்துழைப்பும் அவசியம். ஏன் ஓய்வெடுப்பதில்லை என்று பலரும் கேட்கிறீர்கள்.


நானும் ஓய்வெடுக்கப் போவதில்லை; உங்களையும் ஓய்வெடுக்க அனுமதிப்பதில்லை. நீங்கள் ஆற்றும் களப்பணியே நமது இலக்கினை அடையும் முதல் படி. 2026ல் மீண்டும் நாம் ஆட்சியமைக்க களம் தயாராகிவிட்டது முழு வீச்சுடன் களப்பணியாற்றிடுவோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.






      Dinamalar
      Follow us