தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலை என கூறும் பிரதமரின் பகல் கனவை நினைத்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை: ஸ்டாலின்
தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலை என கூறும் பிரதமரின் பகல் கனவை நினைத்து பரிதாபப்படுவதா என தெரியவில்லை: ஸ்டாலின்
UPDATED : ஏப் 16, 2024 09:13 PM
ADDED : ஏப் 16, 2024 07:34 PM

காஞ்சிபுரம்: இந்தியா முழுதும், இண்டியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என காஞ்சிரபுரம் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
லோக்சபா தேர்தலையொட்டி காஞ்சிபுரம் தி.மு.க, வேட்பாளர் செல்வம், ஸ்ரீபெரும்புதூர் தி.மு.க, வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோரை ஆதரித்து காஞ்சிபுரம் கரசங்காலில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது,
எல்லோருக்கும் எல்லாம்
காங்கிரஸ், தி.மு.க, ஆட்சி காலத்தில் அரசு செய்த சாதனைகள் பட்டியல் நீளமானது. 2021 தேர்தலின் போது பெட்டி வைத்து 100 நாட்களில் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்து அதன்படி முதல்வரின் முகவரி என்ற திட்டத்தின் கீழ் எனக்கு வரும் மனுக்களுக்கு தீ்ரவு காண ஆய்வு கூட்டம் நடத்துகிறேன்.
எல்லோருக்கும் எல்லாம், அனைத்து மாவட்டங்களுக்கும் சீரான வளர்ச்சி என்பதே திராவிட மாடல் ஆட்சியின் சாதனை இந்தியாவின் பிற மாநிலங்கள் தி.மு.க, திட்டங்களை பின்பற்றி வருகின்றன. தனி மனிதனின் பிரச்னைகள் , தேவைகளை தீர்க்க பார்த்து பார்த்து நவடிக்கை எடுத்து வருகிறோம்.
சுயமரியாதைக்கான அங்கீகாரம்
இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற திறன் பயிற்சி தேவை என தொழில் முனைவோர்கள் கூறினர். இதையடுத்து ‛நான் முதல்வர்' திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டது. அரசு கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமில்லாமல் திறன் பயிற்சி வழங்குவது தான் நான் முதல்வர் திட்டம்.
மக்கள் அவார்டு
தேர்தல் அறிக்கையில் சொல்லப்படாத காலை உணவு திட்டத்தையும் நிறைவேற்றி வருகிறோம். ஸ்டாலின் போட்ட கையெழுத்தால் 16 லட்சம் குழந்தைகள் பசியாற காலை உணவு சாப்பிட்டு வருகின்றனர். மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத்தொகை பெண்களின் சுயமரியாதைக்கான அங்கீகாரம். இப்படி தி.மு.க, அரசின் திட்டங்களை பட்டியலிட்டால் பிரசார கூட்டம் சாதனை விளக்க பொதுக்கூட்டமாக மாறிவிடும்.
மத்திய அரசிடம் நான் அவார்டு வாங்கினேன் , நீங்கள் வாங்கினீர்களா என பழனிச்சாமி கேட்கிறார். நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள் என்ற திரைப்பட வசனத்திற்கேற்ப பழனிசாமி அவார்டு வாங்கினார்.
தி.மு.க, அரசு மக்களிடமிருந்து அவார்டு பெற்றுள்ளது. தி.மு.க, வுக்கு அடுத்த அவார்டு ஜூன04-ம் தேதி காத்திருக்கிறது. பழனிசாமி அவர்களே ‛‛யு வெயிட் அண்டு ஸீ '' .பழனிசாமி எதில் முதலிடம் பிடித்தார் என்றால், தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்ததில் தான் முதலிடம் வகித்தார். தமிழ்நாட்டு மக்கள் தான் இனி இந்தியாவின் எதிர்காலம்.
பழனிசாமி நாடகம்
பெண்கள் ஓதுவார்களாக, அர்ச்சகர்களாகவும், அறங்காவலர் குழு தலைவராகவும் ஆகும் அளவிற்கு தமிழகத்தில் முற்போக்கு நிலை காணப்படுகிறது. தனிமனிர்கள் தொடங்கி மாநிலங்களின் அனைத்து உரிமைகளுக்காக போராட வைத்துள்ளார் பிரதமர் மோடி. நிதிக்காகவும், நீதிக்காகவும், தமிழ்நாடு மட்டுமின்றி , கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன.
நான் நேரடியாக சென்று வெள்ள நிவாரண நிதி கேட்டும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. தமிழகத்தில் தி,மு.க.,வுக்கு எதிராக எதிர்பபு அலை வீசவதாக பிரதமர் கூறுகிறார்.பிரதமர் கூறுவதை கேட்டு சிரிப்பதா, அவரது பகல் கனவை நினைத்து பரிதாபப்படுவதா ? என்று தெரியவில்லை. பா.ஜ.,வுக்கு மீண்டும் ஒரு முறை வாக்களித்தால் நாடு 200 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விடும்.
பா.ஜ.விடம் இருந்து அ.தி.மு.க, பிரிந்துவிட்டதாக பழனிசாமி நாடமாடுகிறார். பா.ஜ., வெற்றி பெற்றால் ஆதரவு தருவீர்களா என்ற கேள்விக்கு ,பா.ஜ.வை ஆதரிக்கமாட்டோம் என எங்காவது கூறியிருக்கிறாரா ? பொறுத்திருந்து பாருங்கள் என்கிறார். அ.தி.மு.க,வுக்கு போடும் வாக்கு என்பது பா.ஜ.,வுக்கு போடும் வாக்கு தான். இந்தியா முழுதும் இண்டியா கூட்டணிக்கு ஆதரவாக அலை வீசுகிறது. ஜூன் 4-ம் தேதி தமிழகத்தில் 40-க்கு 40 என மக்கள் வழங்க இருக்கிறார்கள் .எனவே தி.மு.க,வுக்கு வாக்களித்து வேட்பார்களை வெற்றி பெற செய்யுங்கள். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

