sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மிதிக்கட்டும்... நல்லா மிதிக்கட்டும்; ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி ரியாக்சன்!

/

மிதிக்கட்டும்... நல்லா மிதிக்கட்டும்; ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி ரியாக்சன்!

மிதிக்கட்டும்... நல்லா மிதிக்கட்டும்; ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி ரியாக்சன்!

மிதிக்கட்டும்... நல்லா மிதிக்கட்டும்; ஆந்திரா வீடியோவுக்கு உதயநிதி ரியாக்சன்!

150


UPDATED : அக் 09, 2024 01:58 PM

ADDED : அக் 09, 2024 01:50 PM

Google News

UPDATED : அக் 09, 2024 01:58 PM ADDED : அக் 09, 2024 01:50 PM

150


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'என்னை இழிவுப்படுத்துபவர்களை பார்த்து பரிதாபம் வருகிறது' என, துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

தனது படத்தை, ஒரு சிலர் காலால் மிதிக்கும் வீடியோவை, உதயநிதி சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: என்னை இழிவு செய்வதாக நினைத்து தங்களின் அரசியல் முதிர்ச்சி இவ்வளவு தான் என்று அம்பலப்பட்டு நிற்கும் சங்கிகளைப் பார்த்து எனக்குப் பரிதாபம் மட்டுமே வருகிறது. கொள்கை எதிரிகளுக்கு நம் மீது இவ்வளவு ஆத்திரம் வருகிறது என்றால், திராவிடக் கொள்கையினை நான் எந்தளவுக்குச் சரியாக பின்பற்றுகிறேன் என்பதற்கான சான்றிதழாகவே இதனைப் பார்க்கிறேன்.

அம்பேத்கரை எவ்வளவோ அவமதித்தார்கள். கருணாநிதி மீது ஏச்சுக்களையும், பேச்சுக்களையும் தொடுத்தனர். நம் கழகத் தலைவர் மீது வீசப்படாத கடுஞ்சொற்கள் இல்லை. அனைவரும் சமம் என்கிற நமது கொள்கை அவர்களுக்கு எரிச்சலூட்டுகிறது. பிறப்பாலும் மதத்தாலும் பிரித்தாளும் கொள்கையைப் பேசி மக்களை வெல்ல முடியாத அவர்களின் விரக்தி தான் நம்முடைய வெற்றி.

என் புகைப்படத்தை அவர்கள் காலால் இன்னும் நன்கு மிதிக்கட்டும். அவர்களின் அழுக்கேறிய மூளையை நம்மால் சுத்தம் செய்ய முடியாது. அவர்களின் கால்களாவது சுத்தமாகட்டும். கழக உடன்பிறப்புகள் இதைக்கண்டு கோபமுற வேண்டாம். இதற்கு எதிர்வினையாற்றுவதை தவிர்த்து, சமத்துவப் பாதையில் என்றும் அயராது நடை போடுவோம். இவ்வாறு உதயநிதி கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us