"போகப் போகத் தெரியும்": அன்புமணி குறித்து கேள்விக்கு பாட்டுப் பாடிய ராமதாஸ்!
"போகப் போகத் தெரியும்": அன்புமணி குறித்து கேள்விக்கு பாட்டுப் பாடிய ராமதாஸ்!
ADDED : ஜூன் 19, 2025 02:44 PM

சென்னை: பா.ம.க., தலைவர் அன்புமணி நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, போக, போக தெரியும் என பாட்டு பாடி பா.ம.க.,நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.
சென்னையில் நிருபர்களை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார்.
நிருபர்: அன்புமணி கட்சி பொதுக்கூட்டம் தனியாக நடத்துகிறார். தீர்மானம் நிறைவேற்றுகிறார், இதனை எல்லாம் எப்படி பார்க்கிறீங்க?
ராமதாஸ் பதில்: அவரவர் அவர்களின் வேலையை பார்த்து கொள்வார்கள். நீங்கள் உங்களுடைய வேலையாக என்னை விடாமல் துரத்துகிறீர்கள்.
பாட்டு பாடி பதில்!
நிருபர்: அன்புமணி தந்தையிடம் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக சொல்கிறார். நீங்கள் என்ன கட்டளையிட்டாலும் பணியாற்ற தயார் என சொல்கிறார். நேரில் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? இது போதும் என நினைக்கிறீர்களா?
பதில்: கண்ணு நீ சொல்வதற்கான முடிவு, ''போக, போக தெரியும் என பாட்டு பாடி சிரித்து கொண்டே ராமதாஸ் பதில் அளித்தார்.