எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்; ரஜினி தீபாவளி வாழ்த்து
எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்; ரஜினி தீபாவளி வாழ்த்து
UPDATED : அக் 20, 2025 10:52 AM
ADDED : அக் 20, 2025 10:11 AM

சென்னை: எல்லோரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன் என நடிகர் ரஜினி தெரிவித்தார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டின் முன்பு தீபாவளி, பொங்கல், ரஜினிகாந்த் பிறந்த நாளில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதலை திரண்டு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் தீபாவளி வாழ்த்து தெரிவிக்க இன்று ரஜினிகாந்த் வீட்டின் முன்பு அவரது ரசிகர்கள் ஏராளமானோர் காலை முதலை திறந்தனர்.
வீட்டிலிருந்து வெளியே வந்து திரண்டு இருந்த ரசிகர்களுக்கு 74வது பிறந்தநாள் கொண்டாடும் ரஜினிகாந்த் கையசைத்து தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தார். (தற்போது ரஜினிகாந்துக்கு வயது 74).
வேண்டிக்கொள்கிறேன்!
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் ரஜினிகாந்த் கூறுகையில், 'அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லோரும் சந்தோஷமாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆண்டவரிடம் வேண்டிக் கொள்கிறேன்' என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நடிகர் கமல் வாழ்த்து
இது குறித்து, நடிகர் கமல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: ஒளிக்கீற்றால் இருள் கிழிக்கும் முயற்சித் திருநாள்; வெளிச்சத்தால் இணைந்திருக்கும் மகிழ்வுப் பெருநாள். தீதகன்று நன்மைகள் வாழ்வில் பெருக. தீபாவளி எல்லோர்க்கும் நலங்கள் தருக. இவ்வாறு நடிகர் கமல் கூறியுள்ளார்.