ADDED : அக் 25, 2025 06:55 AM

கரூர் துயர சம்பவத்தில் 41 பேர் பலியானது, த.வெ.க., தலைவர் விஜய்க்கு அனுபவம் இல்லை என்பதை காட்டுகிறது. தமிழகத்தில் பா.ஜ., கால் ஊன்ற, மக்கள் இடம் தர மாட்டர். இந்தியாவுக்கே வழிகாட்டும் இடத்தில் தி.மு.க., உள்ளது. கூட்டணியில் சீட் ஒதுக்கீடு பற்றி நாங்கள் பேசியது கிடையாது. ம.தி.மு.க., அங்கீகாரத்தை தக்கவைப்பதற்கு, சில விதிமுறைகளை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது. அதை பின்பற்றி போட்டியிடுவோம்.
முல்லை பெரியாறு அணைக்காக போராட்டம் நடத்தி, வெற்றி கண்டதாக நினைக்கும்போது, கேரளா அமைப்பு தொடர்ந்த வழக்கில், 'முல்லை பெரியாறு அணை தொடர்பான கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்கலாம்' என்ற தீர்ப்பு பேரிடியாக உள்ளது. இதற்கு முன் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மற்றும் வழி காட்டுதல்களை தாண்டி இந்த விஷயம் போகாது என நம்புகிறேன். ஒருவேளை, அப்படிச் சென்றால், நிச்சயம் சட்டரீதியாக போராடுவேன்.
- வைகோ
பொதுச்செயலர், ம.தி.மு.க.,

