துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
ADDED : நவ 04, 2025 10:46 PM

தர்மபுரி: '' பாமக நிறுவனர் ராமதாசை சுற்றி துரோகிகள், தீயசக்திகள் உள்ளனர். அவர்கள் இருக்கும் வரை அவருடன் சேர மாட்டேன்,'' என பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
பா.ம.க.,வில் அப்பா, மகன் இடையிலான மோதல், 10 மாதங்களை கடந்தும் முடிவுக்கு வரவில்லை. இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மகன் அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கியுள்ள ராமதாஸ், அவருக்கு பதிலாக, தன் மூத்த மகள் ஸ்ரீகாந்தியை, கட்சியின் செயல் தலைவராக கடந்த 26ல் நியமித்தார். இந்த மோதல் காரணமாக பாமக தொண்டர்கள் கவலையில் உள்ளனர்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் நடந்த கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது: ராமதாசிடம் இருந்து என்னை பிரித்து இன்று அவரை சுற்றி இருக்கின்ற துரோகிகள், தீய சக்திகள் , திமுகவின் கை கூலிகள் இருக்கம் வரை நான் அங்கே சேர மாட்டேன். அங்கேஇணைய மாட்டேன். ராமதாஸ் ஒரு சமூக சீர்திருத்தவாதி. 45 ஆண்டுகள் தமிழக மக்களுக்காக உழைத்து கொண்டு இருப்பவர். ஆனால், அவரை திசைதிருப்பி மனதை மாற்றி அங்கே இருக்கின்ற இந்த துரோகிகள் இருக்கும் வரை நான் சேர மாட்டேன். இணைய மாட்டேன் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். எவ்வளவு வலியோடு, மன உளைச்சல், மன அழுத்தத்தோடு இதை பேசுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

