அன்புமணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: ராமதாஸ்
அன்புமணி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டேன்: ராமதாஸ்
UPDATED : ஜூலை 11, 2025 10:42 PM
ADDED : ஜூலை 11, 2025 06:48 PM

சென்னை: வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காததை கண்டித்து அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும் அவரது மகனான கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையிலான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பா.ம.க., தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிவிட்டு, 'நானே தலைவர்' என ராமதாஸ் அறிவித்தார். அன்புமணியையும், அவரது ஆதரவாளர்களையும் நீக்கிவிட்டு, புதிய நிர்வாகக் குழுவை ராமதாஸ் அறிவித்துள்ளார்.அருள் எம்.எல்.ஏ.,வை கொறடா பொறுப்பில் இருந்து நீக்க அன்புமணி, சபாநாயகரிடம் கடிதம் கொடுத்ததை அடுத்து, சட்டசபையில் கட்சி இரண்டாக உடைந்தது. தேர்தல் ஆணையத்தையும் அணுக இரு தரப்பும் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்காத தி.மு.க., அரசை கண்டித்து வரும் 20ம் தேதி விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அன்புமணி அறிவித்துள்ளார். தனது தலைமையில் போராட்டம் நடக்கும் எனக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய ராமதாஸ், ' அன்புமணி தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன், ' எனத் தெரிவித்துள்ளார்.