ADDED : ஜூலை 26, 2011 08:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக ஹரிகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமைச் செயலர் பிறப்பித்துள்ள உத்தரவில், 'ஊரக வளர்ச்சித் துறையின் துணைச் செயலராகப் பணியாற்றிய டி.என்.ஹரிகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.புதிய திருப்பூர் பகுதி மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராகப் பணியாற்றிய முத்துவீரன் அங்கிருந்து மாற்றப்பட்டு, சமூக நலத் துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.