காரணம் என்னவோ; ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவு தமிழில் வெளியிட்ட அரசு
காரணம் என்னவோ; ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவு தமிழில் வெளியிட்ட அரசு
ADDED : பிப் 09, 2025 03:00 PM

சென்னை: ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் பற்றிய அரசின் உத்தரவு தமிழில் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழக அரசில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிடம் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. அதுபற்றிய அறிவிப்புகள் வழக்கமாக ஆங்கிலத்தில் வெளியிடப்படும். இந்த அறிவிப்பை தலைமைச் செயலாளர் வெளியிடுவார்.
அதுபோலவே இன்றும் பல்வேறு மாவட்ட கலெக்டர்கள், ஐ.ஏ.எ.,ஸ் அதிகாரிகள் மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளியானது. ஆனால் அதில் ஒரு சிறப்பு இருந்தது தான் ஆச்சரியம். யார் எந்த பணிக்கு மாற்றப்பட்டு உள்ளனர், அவர்களின் பணியின் பெயர், பதவியின் பெயர் என அனைத்தும் தமிழில் வெளியாகி இருந்தது.
அதாவது பணியிட மாற்றம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு முற்றிலும் தமிழில் இருந்தது. அழகு தமிழில் அதிகாரியின் பெயர், அவர்கள் பணியிடம், யாருக்கு பதிலாக யார் பணி அமர்த்தப்படுகின்றனர் என்பது முழு பட்டியலாக வெளியிடப்பட்டு உள்ளது.
ஆங்கிலத்தில் இதுநாள் வரை இருந்த அறிவிப்புகள் முழுக்க, முழுக்க தமிழில் இருந்தன. நீண்ட காலத்துக்கு பிறகு இவ்வாறு தமிழில் அறிவிப்பு வெளியாகி இருப்பதாக பலரும் கருத்து கூறியுள்ளனர்.