அனுமதி இல்லாத கட்டடங்களை இடித்து அகற்ற ஐகோர்ட் உத்தரவு
அனுமதி இல்லாத கட்டடங்களை இடித்து அகற்ற ஐகோர்ட் உத்தரவு
ADDED : பிப் 18, 2025 02:39 PM

சென்னை: 'சென்னை தி.நகரில் உள்ள வணிக கட்டடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
சென்னை தி.நகரில் வணிக கட்டடத்தில் அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டடங்களை இடித்து அகற்ற, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நோட்டீஸ் அனுப்பியது. இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று (பிப்.,18) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
* அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய உரிமை கோர முடியாது.
* வரன்முறை சலுகையை வழக்கமான நடை முறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது.
* அனுமதி இல்லாத கட்டுமானங்களை அனுமதிக்க கூடாது. பெரு முதலீடு என்ற காரணத்துக்காக இரக்கம் காட்டக்கூடாது.
* அனுமதியில்லாத கட்டுமானங்களை நீடிக்க அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் திட்ட வட்டமாக தெரிவித்தனர்.
* பின்னர், சென்னை தி.நகரில் உள்ள வணிக கட்டடத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை 8 வாரங்களில் இடிக்க நடவடிக்கை எடுக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.