ஆட்சியை கொடுத்தால் 6 நாளில் சாராயத்தை ஒழிப்பேன்: அன்புமணி
ஆட்சியை கொடுத்தால் 6 நாளில் சாராயத்தை ஒழிப்பேன்: அன்புமணி
UPDATED : ஆக 15, 2025 07:38 AM
ADDED : ஆக 15, 2025 05:28 AM

சென்னை: ஆட்சியை கொடுத்தால் 6 நாளில் சாராயத்தை ஒழிப்பேன் என்று பா.ம.க., அன்புமணி தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது
‛நாங்கள் இட ஒதுக்கீடு, வேலை, படிப்பு, சுயமரியாதையை தான் கேட்கிறோம். விழுப்புரம் மாவட்டத்தில் தான் 109 டாஸ்மாக் கடைகள் உள்ளன; 24 மணி நேரமும் மது விற்பனையாகிறது. கஞ்சா, போதைப் பொருள் விற்பவர்கள் எல்லாம் தி.மு.க.,வினரே. மரக்காணத்தில் கள்ளச் சாராயத்தால் 22 பேர் இறந்ததும், விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராய சாவு நடந்திருக்காது.
என்னிடம் ஆட்சியை கொடுத்தால், ஆறு நாட்களில் கள்ளச் சாராயம், கஞ்சாவை ஒழிப்பேன். தமிழக போலீசாரை சுதந்திரமாக செயல்பட விடுவதில்லை. வரும் தேர்தலில் யார் வர வேண்டும் என்பதை விட, யார் வரக்கூடாது என்ற இலக்கோடு தமிழக மக்கள் செயல்பட வேண்டும்; தி.மு.க., படுதோல்வி அடைய வேண்டும்'. இவ்வாறு அன்புமணி கூறினார்.

