தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்; இபிஎஸ்
தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும்; இபிஎஸ்
ADDED : மார் 23, 2026 07:26 PM

சென்னை: தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை;
தமிழகத்தின் உணர்வுகளைப் புரிந்து, தமிழக மக்களின் எண்ணங்களை ஈடேற்றி, மக்களைக் காத்து, தமிழகத்தை மீட்கப் போகும் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் எம்ஜிஆர் மாளிகையில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையில் பாஜ 27 தொகுதிகளிலும், பாமக 18 தொகுதிகளிலும்,அமமுக 11 தொகுதிகளிலும் போட்டியிடுவது என தொகுதிப் பங்கீடு உடன்பாடு மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம்.
தமிழகம் வாழ வேண்டும் என்றால் திமுக வீழ வேண்டும் என்ற தமிழக மக்களைக் காப்பதற்கான உன்னதமான ஒற்றை நோக்கத்தோடு இணைந்துள்ள நமது வெற்றிக் கூட்டணி, தமிழக மக்களின் ஒருமித்த ஆதரவோடு மிகப்பெரிய வெற்றியைப் பெற்று, அஇஅதிமுகவின் பொற்கால ஆட்சி மீண்டும் அமையப்போவது உறுதி.
நமது கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதரக் கட்சிகளுக்குமான இடங்கள் மிக விரைவாக இறுதி செய்யப்படும். களம் நமதே, வெற்றியும் நமதே.
இவ்வாறு இபிஎஸ் கூறியுள்ளார்.

