ஆசிரியர்களை போராட வைத்தால் அது நாடு அல்ல சுடுகாடு
ஆசிரியர்களை போராட வைத்தால் அது நாடு அல்ல சுடுகாடு
ADDED : டிச 16, 2025 07:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு பணியாளர்களை பாதுகாக்காத அரசாக, தி.மு.க., உள்ளது. இழந்த உரிமைகளை பிச்சையெடுத்து பெற முடியாது; போராடி தான் பெற முடியும். அரசை வழிநடத்தும் ஊழியர்களே போராடினால், அரசு என்ன லட்சணத்தில் இருக்கும்?
ஒரு நாட்டின் எதிர்காலத்தை வகுப்பறைகளே தீர்மானிக்கிறது. கல்வியில் சிறந்த நாடுகளான தென்கொரியா, ஜப்பான், ஹாங்காங், பின்லாந்து, சிங்கப்பூர் ஆகியவற்றில் ஆசிரியர்களுக்கு மட்டுமே மரியாதை.
அப்படிப்பட்ட ஆசிரியர்களையே வீதிக்கு வந்து போராட வைத்தால், இது நாடு அல்ல; சுடுகாடு.
சாராயமே பொருளா தாரம் என தி.மு.க., அரசு நம்புகிறது. சாராயம் குடித்து இறந்தால், 10 லட்சம் ரூபாய் தருகின்றனர். விடுபட்ட மகளிரில் லட்சக்கணக்கானோருக்கு உரிமைத்தொகை; மாணவர்களுக்கு லேப்டாப் என கூறுகின்றனர். இதெல்லாம் தேர்தல் மாயம்.
- சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

