தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ அதிக ஓட்டுகளை வாங்கி தந்தால் மோடியை சந்திக்கலாம்: பா.ஜ., 'ஆபர்'

 அதிக ஓட்டுகளை வாங்கி தந்தால் மோடியை சந்திக்கலாம்: பா.ஜ., 'ஆபர்'

 அதிக ஓட்டுகளை வாங்கி தந்தால் மோடியை சந்திக்கலாம்: பா.ஜ., 'ஆபர்'


ADDED : ஏப் 21, 2026 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 01:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: 'பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளில், 75 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகளை வாங்கி தரும், 'பூத்' கமிட்டி நிர்வாகிகள், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும்' என பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் தெரிவித்துள்ளார்.

பாஜ., வட்டாரங்கள் கூறியதாவது:

அ.தி.மு.க., கூட்டணியில், 27 தொகுதிகளில் பா.ஜ., போட்டியிடுகிறது. இரட்டை இலக்கத்தில், எம்.எல்.ஏ.,க்களை வெற்றி பெற வைத்து, சட்டசபைக்கு அனுப்ப வேண்டும் என, மாநில, மாவட்ட நிர்வாகிகளுக்கு, கட்சி மேலிடம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட மேலிட தலைவர்கள் பிரசாரம் செய்தனர்.

சாத்துார், மதுரை தெற்கு உட்பட, பா.ஜ., போட்டியிடும் தொகுதிகளுக்கு கடந்த வாரம், பா.ஜ., தேசிய அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் சென்று, 'சக்தி கேந்திரா பொறுப்பாளர்கள்' உள்ளிட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

அப்போது, ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், 75 சதவீதத்திற்கு மேல் ஓட்டுகளை வாங்கி தரும், 'பூத்' கமிட்டி நிர்வாகிகளை, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us