விவாதிக்க நான் தயார்; இ.பி.எஸ்.,க்கு உதயநிதி பதில்!
விவாதிக்க நான் தயார்; இ.பி.எஸ்.,க்கு உதயநிதி பதில்!
ADDED : நவ 11, 2024 12:31 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: அரசுத் திட்டங்கள் தொடர்பாக நேரடி விவாதத்திற்கு தயாரா என எதிர்க்கட்சி தலைவர் சவால் விடுத்தது குறித்த கேள்விக்கு, 'என்னை கூப்பிட்டால் நான் போவேன்' என துணை முதல்வர் உதயநிதி பதில் அளித்தார்.
நிருபர்களிடம் உதயநிதி கூறியதாவது:
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். விவாதத்திற்கு என்னை அழைத்தால் நிச்சயமாக செல்வேன். கருணாநிதி பெயரை தவிர வேறு யார் பெயரை வைக்க வேண்டும்? விமர்சனங்கள் வருவதால் பெயரை வைக்காமல் இருக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.