sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 15, 2025 ,ஆவணி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாநில உரிமை பற்றி நீங்கள் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! : முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்

/

மாநில உரிமை பற்றி நீங்கள் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! : முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்

மாநில உரிமை பற்றி நீங்கள் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! : முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்

மாநில உரிமை பற்றி நீங்கள் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! : முதல்வருக்கு இ.பி.எஸ்., பதில்

20


ADDED : மே 21, 2025 06:01 PM

Google News

ADDED : மே 21, 2025 06:01 PM

20


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: '' கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! '' என அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என வீர வசனம் பேசி, தமிழகத்தின் முதல்வராக, தமிழகத்தின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழகமா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?

ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? முதல்வர் ஸ்டாலின், அது கண்ணாடி! … உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?

தி.மு.க., அலுவலகத்தின் மேல் மாடியில் சி.பி.ஐ., ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது மேஜையின் கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?

கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! நான் கேட்ட கேள்வி என்ன?யார் அந்த தம்பி ?உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்?

உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, அமலாக்கத்துறை ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்?

டாஸ்மாக்கில் 'தம்பி' அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.

உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்!

உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்!

ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!

மீண்டும் கேட்கிறேன் யார் அந்த தம்பி? இவ்வாறு அந்த அறிக்கையில் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us