எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது; யாரை சொல்கிறார் துரைமுருகன்!
எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது; யாரை சொல்கிறார் துரைமுருகன்!
UPDATED : ஜூலை 15, 2025 04:55 PM
ADDED : ஜூலை 15, 2025 04:53 PM

வேலூர்: 'எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது' என விஜய் குறித்து நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் நிருபர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அதன் விபரம் பின்வருமாறு:
கேள்வி: சேலத்தில் கருணாநிதி சிலை மீது கருப்பு மை பூசப்பட்டுள்ளது?
துரைமுருகன் பதில்: யாரோ ஒரு காலி பையன் ஊத்தி இருக்கான் கருப்பு மையை ஊற்றி இருக்கான்.
கேள்வி: புத்தக வெளியீட்டு விழாவில் பேசும்போது, சீனியர்கள் தான் தூண்கள். அவர்கள்தான் சிகரம் என கடந்த முறை பேசியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?
துரைமுருகன் பதில்: நான் பார்த்தேன். அவருக்கு (ரஜினி) நான் போன் பண்ணி பேசினேன். ரொம்ப தேங்க்ஸ் சார் இப்பவாவது மறக்காமல் பேசி இருக்கிறீர்கள் என்று கூறினேன்.
கேள்வி: நீங்கள் செய்த தவறை நீங்களே சரி செய்துவிடுங்கள் என த.வெ.க., தலைவர் விஜய் பேசியுள்ளாரே?
துரைமுருகன் பதில்: ஏன் கேள்வி கேட்பதற்கு கூட அவர் வரமாட்டாரா? எங்களை ஒழிக்க நினைத்தால் சட்டசபைக்கு கூட வர முடியாது.