ADDED : நவ 27, 2024 04:49 AM

சென்னை: 'தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின், 'குரூப் 1' தேர்வுக்கு சம்பந்தமில்லாத கருத்துகளை எழுதினால், விடைப்புத்தகம் செல்லாததாகி விடும்' என, டி.என்.பி.எஸ்.சி., எச்சரித்துள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிக்கை:
மாவட்ட உதவி கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு, குரூப் 1 எழுத்துத்தேர்வு நடத்தப்பட உள்ளது. ஏற்கனவே நடந்த தேர்வில் சிலர், வினாக்களுக்கு தொடர்பில்லாத விஷயங்களையும், தங்களை அடையாளப்படுத்தும் வகையிலும் எழுதி இருந்தனர்.
நடக்க உள்ள குரூப் 1, குரூப் 1பி உள்ளிட்ட தேர்வுகளில், அவ்வாறு யாரேனும் எழுதினாலோ, விடைப்புத்தகத்தின் பட்டைக்குறியீட்டை சேதப்படுத்தினாலோ, பிறருக்கு தெரியும்படி விடை எழுதுவது, மற்றவர்களின் விடைக்குறிப்பை பார்த்து எழுதுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டாலோ, அவர்களின் விடைப்புத்தகம் செல்லாததாக அறிவிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.