100 பேரை தொழில் முனைவோராக்க சென்னை ஐ.ஐ.டி., புத்தாண்டு இலக்கு
100 பேரை தொழில் முனைவோராக்க சென்னை ஐ.ஐ.டி., புத்தாண்டு இலக்கு
ADDED : டிச 21, 2024 07:42 PM
சென்னை:தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் ஒட்டு மொத்த தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி., தொடர்ந்து ஆறாவது ஆண்டாகவும், இன்ஜினியரிங் பிரிவில், தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாகவும் முன்னிலையில் உள்ளது.
கியூ.எஸ்., உலக பல்கலை தரவரிசையில், 285வது இடத்தில் இருந்த சென்னை ஐ.ஐ.டி., இந்த ஆண்டு, 58 இடங்கள் முன்னேறி, 227வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில், அடுத்த ஆண்டின் இலக்கு குறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும் புத்தாண்டில் கல்வியை மட்டுமின்றி, சுய வேலை வாய்ப்புக்கான தொழில் முனைவை ஊக்குவிக்கும் வகையில், 100 தொழில் முனைவோரை உருவாக்க, 'ஸ்டார்ட் அப் சதம்' என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம்.
'பான்- ஐ.ஐ.டி., - என்.ஐ.டி.,' உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து, 'இன்வென்டிவ் 2025' என்ற புதிய கண்டுபிடிப்பு கண்காட்சியை, அடுத்த ஆண்டு செயல் விளக்கத்துடன் நடத்த உள்ளோம்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட, புதிய துறைகள் சார்ந்த ஆய்வுகளை நேர்த்தியுடன் செய்ய உள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.