UPDATED : நவ 20, 2026 06:58 PM
ADDED : நவ 20, 2026 06:58 PM
சென்னை: சமீப கால தொழில் நுட்பங்கள் குறித்து தெரிந்து கொள்ள, பள்ளி மாணவர்களுக்கு, சென்னை ஐ.ஐ.டி., நடத்தும், ‘ஆன்லைன்’ வகுப்புகளுக்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு, சமீப கால தொழில்நுட்பங்கள், பல்துறை சார்ந்த பாடங்கள், தொழில் வாய்ப்புகளை அறிமுகப்படுத்த, சென்னை ஐ.ஐ.டி., பள்ளி இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில், நாடு முழுதும், 6,500க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 2.25 லட்சம் மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர். இதில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் சேர்ந்து பயனமடையலாம்.
மாணவர்களுக்காக, எட்டு வார கால ‘ஆன்லைன்’ சான்றிதழ் படிப்பிற்கான வகுப்புகள், வரும் 2027 ஜன., 11ல் தெடங்குகிறது. மாணவர்கள் https://code.iitm.ac.in/schoolconnect/ இணைய தளத்தில் ஜன., 8ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு, connect@study. iitm.ac.in என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
