ADDED : நவ 03, 2025 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு அளித்த பேட்டி:
செங்கோட்டையனை கட்சியிலிருந்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நீக்கிஉள்ளார். யாராக இருந்தாலும், கட்சி தலைமை சொல்வதற்கு கட்டுப்பட வேண்டும். கட்சி என்றால், ஒவ்வொருவருக்கும் ஒரு மன வருத்தம் இருக்கத்தான் செய்யும். எனக்கும் கூடத்தான் மன வருத்தம் இருக்கு. யாருக்கு மன வருத்தம் இருந்தாலும், அதை பொதுச் செயலரை நேரில் பார்த்து தான் சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு, ஊடகங்கள் மூலம் தெரிவிக்கக் கூடாது.
இப்படி நான் சொல்வதால், 'செல்லுார் ராஜுவுக்கு ஏதோ மன வருத்தம் இருக்கிறது' என எழுதி விடாதீங்க. எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என்னை பொதுச்செயலர் நன்றாகத்தான் வைத்திருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.

