தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ ஒரே வண்ண சேலையில் த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள்

 ஒரே வண்ண சேலையில் த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள்

 ஒரே வண்ண சேலையில் த.வெ.க., - எம்.எல்.ஏ.,க்கள்


ADDED : செப் 08, 2026 03:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 03:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டசபைக்கு நேற்று, த.வெ.க., பெண் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து வந்து, கவனத்தை ஈர்த்தனர்.

சட்டசபையில் நேற்று காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, முதல்வர் விஜய் பதில் அளித்தார்.

சட்டசபை நிகழ்ச்சிகள் தொடங்கும் முன், த.வெ.க., --- எம்.எல்.ஏ., சத்யபாமா, முதல்வர் விஜய் நெற்றியில் குங்குமம் வைத்து, வாழ்த்து தெரிவித்தார்.

சட்டசபைக்கு பெண் அமைச்சர்கள் கீர்த்தனா, ஜெகதீஸ்வரி, விஜயலட்சுமி, கமலி மற்றும் த.வெ.க., பெண் எம்.எல்.ஏ.,க்கள் பல்லவி, காமாட்சி, சிந்து, கனிமொழி, சத்யபாமா, தமிழ்ச்செல்வி, சத்யா, குழந்தை ராணி ஆகியோர் சிவப்பு, ஆரஞ்சு கலந்தது போன்ற, ஒரே வண்ணத்தில் சேலை அணிந்து வந்தனர்.

தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதாவும், அதே நிறத்தில் சேலை அணிந்து வந்திருந்தார். இதனால், 'நீங்களும் எங்கள் பக்கம் வந்து விட்டீர்களா' என, அவரிடம் அமைச்சர்கள் நகைச்சுவையாக கேட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us