ADDED : ஜூலை 25, 2011 09:58 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : அமைச்சர் கருப்பசாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவர் வகித்து வந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை, அமைச்சர் சி.வி.சண்முகம் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கவர்னர் பர்னாலா பிறப்பித்துள்ள உத்தரவில், ''முதல்வரின் அறிவுரைப்படி, அமைச்சர் கருப்பசாமி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால், அவர் வசம் இருந்த விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வசம் ஒப்படைக்கப்படுகிறது. இதையடுத்து, சி.வி.சண்முகம், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் என அழைக்கப்படுவார். அதே நேரத்தில், கருப்பசாமி அமைச்சராக தொடருவார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.