தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/‘போக்சோ’ வழக்கில் கைதானவர் மீது ஆசிட் வீசிய கைதியிடம் விசாரணை

‘போக்சோ’ வழக்கில் கைதானவர் மீது ஆசிட் வீசிய கைதியிடம் விசாரணை

‘போக்சோ’ வழக்கில் கைதானவர் மீது ஆசிட் வீசிய கைதியிடம் விசாரணை


UPDATED : அக் 12, 2026 07:11 PM

ADDED : அக் 12, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 07:11 PM ADDED : அக் 12, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்: சேலம் மத்திய சிறையில், ‘போக்சோ’ வழக்கில் கைதான கைதி மீது, மற்றொரு கைதி ஆசிட் வீசியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் மத்திய சிறையில், 1,400க்கும் மேற்பட்ட தண்டனை, விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டம், அருர் அருகே, எருமைபட்டி குமாரபாளையத்தை சேர்ந்த சின்ராஜ், 71, என்பவர் கடந்த ஜூலை மாதம், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், அரூர் மகளிர் போலீசாரால் போக்சோவில் கைதாகி, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் கடந்த மாதம், 29ல் சிறையில் துாய்மை பணயில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அதே பிளாக்கில் அடைக்கப்பட்டு இருந்த, கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்தானப்பள்ளி பூசாரிப்பட்டியை சேர்ந்த கொலை வழக்கு கைதி திருப்பதி, 44, வந்துள்ளார்.

அவர், சின்ராஜிடம் தகராறில் ஈடுபட்டு, கழிப்பறைக்கு சுத்தம் செய்ய வைத்திருக்கும் ‘லைசால்’ ஆசிட்டை எடுத்து வீசியுள்ளார். அது, சின்ராஜ் உடலில் பட்டதால் அலறி துடித்துள்ளார். அவரை சிறை காவலர்கள் மீட்டு, சிறையில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி வழங்கிய பின், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, சிறை காவலர்கள் அளித்த புகாரின்படி, அஸ்தம்பட்டி போலீசார், கைதி திருப்பதி மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us