UPDATED : ஜூலை 29, 2023 07:13 AM
ADDED : ஜூலை 29, 2023 07:10 AM

சென்னை : 'அரசு அலுவலர்கள், தமிழில் கையெழுத்திட வேண்டும்' என்பதை அறிவுறுத்தி, பள்ளிக் கல்வி இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், எந்த மொழியில் கையெழுத்திடப்பட்டு உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குனர் அறிவொளி சார்பில், துறை அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு உத்தரவுப்படி, அரசு அலுவலக பணியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர், உரிய விதிமுறைகளின் படி, அனைத்து இனங்களிலும் தங்கள் பெயர்களை எழுதும்போதும், கையெழுத்திடும்போதும், கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பமிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையில், இயக்குனரின் சார்பில் அலுவலர் ஒருவர் கையெழுத்திட்டுள்ளார். அவரின் கையெழுத்து, எந்த மொழியில் உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் யார், அவரது பெயர், எந்த நிலை அதிகாரி என்பதும் குறிப்பிடவில்லை.
ஆனால், அந்த சுற்றறிக்கையில், அதிகாரியின் கையெழுத்தில் ஒரு எழுத்து கூட தமிழாக தெரியவில்லை; ஆங்கிலமாகவும் தெரியவில்லை. ஒரு வேளை கையெழுத்துக்கு மொழி கிடையாது என நினைத்து விட்டாரோ. இவ்வாறு அவர்கள் கூறினர்.

