உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : ஆக 05, 2026 11:00 PM
அ நிறம் | அளவு
சென்னை: ஸ்காட்லாந்த் நாட்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியில், ஆண்களுக்கான பளுதுாக்கும் போட்டியில், 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி.
ஆண்களுக்கான மும் முறை தாண்டுதல் போட்டி யில் வெள்ளி வென்ற, திரு வாரூரை சேர்ந்த தடகள வீரர் பிரவீன் சித்திரவேல் ஆகியோருக்கு, தலா 30 லட்சம் ரூபாய்.
வெண்கலம் வென்ற, மதுரை செல்வபிரபுக்கு 20 லட்சம் ரூபாய், ஊக்கத் தொகைக்கான காசோலையை, நேற்று தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய் வழங்கினார்.
பிரவீன் சித்திரவேலுக்கு பதிலாக, அவரது தந்தை சித்திரவேல், காசோலையை பெற்றுக் கொண்டார்.
அப்போது, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
