ADDED : ஏப் 02, 2025 03:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்ட அரசாணை:
சமூக நல திட்டங்களுக்கான, குடும்ப ஆண்டு வருவாயின் உச்ச வரம்பு, 72,000த்தில் இருந்து, 1.20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம் ஆகியவற்றிற்கு வருமான உச்சவரம்பு ஏற்கனவே முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
- நமது நிருபர்-

