சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி; வருமான வரித்துறை அதிகாரிகள், எஸ்.ஐ., சிக்கினர்!
சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி; வருமான வரித்துறை அதிகாரிகள், எஸ்.ஐ., சிக்கினர்!
ADDED : டிச 18, 2024 11:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: சென்னையில் ரூ.20 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில், எஸ்.ஐ., மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை ஓமந்தூரர் அரசு மருத்துவமனை அருகே பைக்கில் ரூ.20 லட்சம் கொண்டு சென்றவரை வருமானவரித்துறை அதிகாரிகள் மடக்கி உள்ளனர். அவரிடம் இருந்து மிரட்டி பணம் பெற்றுள்ளனர். இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் தாமோதரன், பிரதீப், பிரபு ஆகிய 3 பேர் மற்றும் திருவல்லிக்கேணி எஸ்.ஐ., ராஜா சிங் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், இன்று (டிச.,18) எஸ்.ஐ., மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் 3 பேர் என மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.