UPDATED : ஜூலை 25, 2011 09:02 AM
ADDED : ஜூலை 24, 2011 09:24 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வருமான வரித்துறையின் 150 ஆண்டு கொண்டாட்டத்தின் நிறைவு விழா, இன்று நடந்தது.
விழாவில், தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா கலந்துகொண்டு பேசினார். தனிப்பட்ட முறையில் அதிகமாக வருமான வரி செலுத்திய ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் நிறுவன துணைத்தலைவர் லட்சுமி நாராயணன், தொழில் அல்லாததில் அதிகமான வருமான வரி செலுத்திய ராம்தாஸ், தொழில் துறையில் அதிக வருமான வரி செலுத்திய ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் இயக்குனர் வெங்கட கிருஷ்ணன் ஆகியோருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.விழாவில், திரைப்பட நடிகர் கமலஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஸ்ரீகாந்த்துக்கு நினைவுப் பரிசு வழங்கினார்..