பத்திரிகையாளர் குடும்ப நிதி உயர்வு: அரசாணை வெளியீடு
பத்திரிகையாளர் குடும்ப நிதி உயர்வு: அரசாணை வெளியீடு
ADDED : டிச 20, 2024 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பத்திரிகையாளர்கள் குடும்ப உதவி நிதியை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.
முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து, பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணி காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு, உதவி நிதியாக 10 லட்சம்; 15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் குடும்பத்துக்கு, 7.50 லட்சம்.
மேலும், 10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் குடும்பத்திற்கு 5 லட்சம்; ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் குடும்பத்திற்கு 2.50 லட்சம் ரூபாய் உதவி நிதியாக உயர்த்தப்பட்டுஉள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது. இதற்கு முன்பிருந்த தொகை, தற்போது இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.