ADDED : பிப் 06, 2024 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:வடகிழக்கு பருவ மழை கைகொடுத்ததால், தமிழகத்தின், 13 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
நீர்வளத்துறையின் கீழ் இயங்கும் மாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆய்வு மையம் வாயிலாக, நிலத்தடி நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாத இறுதியிலும், நிலத்தடி நீர் இருப்பு ஆய்வு செய்யப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பப்படுகிறது.
இதற்காக பல்வேறு இடங்களில் ஆய்வு கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. தனியார் நீராய்வு நிறுவனங்களிடம் இருந்தும், ஆய்வு அறிக்கைகள் பெறப்படுகின்றன.
அதன்படி, ஜனவரி மாதத்தில், தஞ்சாவூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், அரியலுார், கோவை, மதுரை, ராமநாதபுரம், தேனி, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, மயிலாடுதுறை மாவட்டங்களில் நிலத்தடிநீர் மட்டம் உயர்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

