ADDED : பிப் 01, 2024 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சத்துணவு மையங்களில், குழந்தைகளின் மதிய உணவுக்கான செலவுத் தொகையை உயர்த்தி வழங்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, தினசரி ஒருவருக்கு பருப்பு பயன்படுத்தும் நாட்களில், ஒரு ரூபாய் 52 காசு; பருப்பு பயன்படுத்தாத நாட்களில், ஒரு ரூபாய் 81 காசு வழங்கப்படுகிறது. தற்போது அனைத்து நாட்களுக்கும், உணவுக்கான செலவுத்தொகையை உயர்த்தி, நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு, 2.39 ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 41.14 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். மொத்தம் 11.50 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவர்.