ADDED : மார் 04, 2024 05:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம் சூரியசக்தி மின் உற்பத்தி, 5,000 மெகாவாட்டை தாண்டி, 5,223 மெகாவாட்டாக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில், 7,426 மெகாவாட் திறனில் சூரியசக்தி மின் நிலையங்கள் உள்ளன. மழை இல்லாத நாட்களில், தினமும் சராசரியாக, 3,000 மெகாவாட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியாகிறது.
கடந்த பிப்., 23ல், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, 4,920 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியானது. இதுவே, நேற்று முன்தினம் வரை உச்ச அளவாக இருந்தது.
இந்நிலையில், இம்மாதம், 2ம் தேதி சூரியசக்தி மின் உற்பத்தி எப்போதும் இல்லாத வகையில், 5,000 மெகாவாட்டை தாண்டி, 5,223 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
இது வரும் நாட்களில், மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

