ADDED : டிச 01, 2024 09:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்வதால் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, சாத்தனூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பால், மொத்த உயரமான 119 அடியில் முழுவதும் நிரம்பியது.
அணைக்கு வினாடிக்கு 9,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணை முழுவதும் நிரம்பி விட்டதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் இருந்து நீரை வெளியேற்றி வருகின்றனர். வினாடிக்கு 9 ஆயிரத்து 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.