ADDED : மே 11, 2025 01:42 AM
புதுடில்லி:அண்டை நாடான பாகிஸ்தானுடன் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், டில்லி மாநகர் முழுதும் உள்ள அடுக்குமாடி குடியிருப்போர் நலச் சங்கங்கள் அவசரகால தயார்நிலை நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கிழக்கு டில்லி குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் பி.எஸ்.வோஹ்ரா, “கிழக்கு டில்லியில் குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் வெளிநாட்டினர் கண்காணிக்கப்படுகின்றனர். மேலும், குடியிருப்பு வளாகத்துக்குள் வெளியாட்கள் வருவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்க அறிவுறுத்தியுள்ளோம்,”என்றார்.
துவாரகா வீட்டுவசதி சங்க குடியிருப்பில், பிரதான வாயிலை தாண்டி உள்ளே வர டெலிவரி ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடக்கு டில்லியின் முகர்ஜி நகரில் தங்குமிடங்களில் குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.