மத அடிப்படையிலான பயங்கரவாத ஆதரவு அதிகரிப்பு: ஹிந்து மக்கள் கட்சி ஆதங்கம்
மத அடிப்படையிலான பயங்கரவாத ஆதரவு அதிகரிப்பு: ஹிந்து மக்கள் கட்சி ஆதங்கம்
UPDATED : அக் 05, 2026 12:00 AM
ADDED : அக் 04, 2026 08:22 PM
ஊட்டி: மாநிலத்தில் மத அடிப்படையிலான அரசியல் மற்றும் பயங்கரவாத ஆதரவு அதிகரித்துள்ளதாக, ஹிந்து மக்கள் கட்சி வருத்தம் தெரிவித்துள்ளது.
ஊட்டியில் ஹிந்து மக்கள் கட்சி செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்ற ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:
'பிளை துபாய் விமானத்தில் பயங்கரவாத சதியை முறியடித்த விமானி, ஸ்மித் மச்சாரின் வீரம் பாராட்டுக்குரியது. அவர், விரைவில் குணமடைவதுடன், அவருக்கு, 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும்.
சவுதியில் கைது செய்யப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கை தமிழர் அனேஜன் சிவராஜாவை காப்பாற்ற, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், மத அடிப்படையிலான அரசியல் மற்றும் பயங்கரவாத ஆதரவு அதிகரித்து வருகிறது. இது கவலை அளிக்கிறது.
சாலை, துறைமுகம் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்வது அவசியம். சில அரசியல் கட்சிகள், இந்த திட்டங்களை எதிர்த்து வருகின்றன.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
