ADDED : ஆக 16, 2025 02:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக, சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்கவில்லை.
சென்னையில், சேப்பாக்கம் லாக் நகர் முதல் மயிலாப்பூர் வரை, தெற்கு பகிங்ஹாம் கால்வாய் புனரமைப்பு பணியை, நேற்று முன்தினம் துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்றார்.
அங்கு கீழே தவறி விழுந்ததில், அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. வீட்டிலேயே சிகிச்சை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில், அவர் பங்கேற்கவில்லை.

