தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/173வது ஆண்டில் அடி வைத்தது இந்திய தபால் துறை

173வது ஆண்டில் அடி வைத்தது இந்திய தபால் துறை

173வது ஆண்டில் அடி வைத்தது இந்திய தபால் துறை


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: இந்திய தபால் துறை கடந்த மாதம் 30ம் தேதி, 172வது ஆண்டை நிறைவு செய்து, 173வது ஆண்டில் நேற்று அடியெடுத்து வைத்துள்ளது.

இந்தியாவில் ஆதிக்கம் செலுத்திய கிழக்கிந்திய கம்பெனியின் தகவல் பரிமாற்றத்துக்காக, 1854ல், அக்., 1ம் தேதி, அப்போதைய கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி பிரபுவால், இந்திய தபால் துறை தொடங்கப்பட்டது.

கடிதங்களை மட்டுமே சுமந்து செல்லாமல், காலத்தின் தேவைக்கு ஏற்ப, புதிய போக்குவரத்து வசதிகளையும், ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி, ‘ஸ்பீடு போஸ்ட், ஏர்மெயில்’ என, கிராம மக்களுக்கும் பணப் பரிவர்த்தனையை உறுதியாக்கும் வகையில், நவீன வங்கி சேவை மற்றும் காப்பீட்டு சேவைகளையும் தபால் துறை அளித்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில், பல வகை நிலப்பரப்புகளை கடந்து, மக்களின் உணர்வுகளை இணைக்கும் பாலமாக இருந்தவை, 6 இலக்க பின்கோடுகளும், 1.59 லட்சம் தபால் நிலையங்களும், அவற்றில் பணியாற்றிய தபால்காரர்கள் உள்ளிட்ட ஊழியர்களும் தான்.

ஹிமாச்சல பிரதேசத்தின், 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள ஹிக்கிம் தபால் நிலையம், உலகின் உயரமான இடத்தில் உள்ள தபால் நிலையம் என்ற பெருமைக்குரியது. வெறும் சிவப்பு நிற பெட்டிகளாக அடையாளம் காணப்பட்ட இந்திய தபால் அலுவலகங்களில் இன்று, சேமிப்பு கணக்குகள், வைப்பு கணக்குகள், வைப்பு நிதிகள், பத்திரங்கள், காப்பீடுகள், பொது வருங்கால வைப்பு நிதிகள் என, மக்களின் முதலீடுகளுடன் வளர்ந்துள்ளன. இந்திய தபால் துறை, மக்களின் நம்பிக்கையை வளர்த்து, புதுப்பொலிவுடன் 173ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us