மே18ல் 101வது ராக்கெட்டை ஏவுகிறது இந்தியா; விளக்கினார் இஸ்ரோ தலைவர் நாராயணன்!
மே18ல் 101வது ராக்கெட்டை ஏவுகிறது இந்தியா; விளக்கினார் இஸ்ரோ தலைவர் நாராயணன்!
ADDED : மே 15, 2025 05:44 PM

சென்னை: 'மே 18ம் தேதி இந்தியா 101வது ராக்கெட்டை ஏவுகிறது. இந்த பி.எஸ்.எல்.வி.,சி.61 ராக்கெட்டை பூமி தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்புகிறோம்' என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மே 18ம் தேதி இந்தியா 101வது ராக்கெட்டை ஏவுகிறது. நாம் முதலில் 1979ம் ஆண்டு எஸ். எல். வி. 3 ராக்கெட்டை அனுப்பினோம். அது 98 சதவீதம் வெற்றி அடைந்தது. பி.எஸ்.எல்.வி.,சி. 61 ராக்கெட் வரும் மே 18ம் தேதி பூமி தொடர்பாக ஆராய்ச்சி செய்வதற்கு அனுப்புகிறோம். பூமியில் இருப்பது எல்லாம் கண்டுபிடிக்க முடியாது.
நமது செயற்கைக்கோள் அனைத்தும் நன்றாக வேலை செய்கிறது. தற்போது இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக மாறியுள்ளது. நாம் மற்ற நாடுகளுடன் போட்டி போடுவது கிடையாது. நமது மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்து கொண்டு இருக்கிறோம்.
நமது மக்கள் சந்தோஷமாக வாழ்வதற்கும், பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தான் நாம் ராக்கெட்டை அனுப்புகிறோம். இஸ்ரோ அனுப்பிய 50 செயற்கை கோள்கள் மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. இவ்வாறு நாராயணன் கூறினார்.